சுடச்சுட

    

    'மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகைக்கு ஆதார் கட்டாயமில்லை'

    By DIN  |   Published on : 23rd March 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    'மூத்த குடிமக்கள், ரயில் பயணக் கட்டண சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது:
    இதுதொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மக்களவையில் புதன்கிழமை கூறியதாவது:
    மூத்த குடிமக்கள், ரயில் பயணக் கட்டண சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை. எனினும், மூத்த குடிமக்களின் விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பை உருவாக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு தொடங்கியுள்ளது. மூத்த குடிமக்களின் சலுகைகளை வேறு யாரேனும் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு, இந்த தகவல் தொகுப்பு உதவியாக இருக்கும்.
    ரயில்வேயில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ரயில் பயணச் சீட்டு முன்பதிவில் முழுமையாக ரொக்கமில்லா பரிவர்த்தனையை கொண்டு வருவதே எங்களது குறிக்கோளாகும் என்றார் சுரேஷ் பிரபு.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai