Enable Javscript for better performance
வெளிநாட்டில் இருந்து நிதி பெற 11,319 தன்னார்வ நிறுவனங்களுக்கு தடை- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டில் இருந்து நிதி பெற 11,319 தன்னார்வ நிறுவனங்களுக்கு தடை

    By DIN  |   Published on : 23rd March 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதற்கு 11,319 தன்னார்வ நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
    இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டத்தின்கீழ் 11,319 தன்னார்வ நிறுவனங்கள் பெற்றிருந்த உரிமங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதியுடன் காலாவதியாகி விட்டன. எனினும், அந்நிறுவனங்கள் தங்களது உரிமங்களை புதுப்பிக்கக்கோரி விண்ணப்பம் அளிக்கவில்லை. இதையடுத்து, அந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி திரட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அதுபோல், 14 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வ நிறுவனங்களின் உரிமங்கள், அந்த நிறுவனங்கள் விதியை மீறி செயல்பட்ட காரணத்துக்காக ரத்து செய்யப்பட்டு விட்டன. மத்திய அரசிடம் இருக்கும் தகவல்கள், நாடு முழுவதும் 25 ஆயிரம் தன்னார்வ நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் அமைப்பின் இணையதள சேவைகளை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றன என்று அந்தப் பதிலில் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai