Enable Javscript for better performance
'2024-ஆம் ஆண்டுக்குள் அணுமின் உற்பத்தியை மும்மடங்காக்க இலக்கு'- Dinamani

சுடச்சுட

    

    '2024-ஆம் ஆண்டுக்குள் அணுமின் உற்பத்தியை மும்மடங்காக்க இலக்கு'

    By DIN  |   Published on : 23rd March 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jitenrarshingbjp

    வரும் 2024-ஆம் ஆண்டுக்குள், நாட்டில் அணுமின் உற்பத்தியை மும்மடங்காக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயித்து, மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
    இதுதொடர்பாக, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறியதாவது:
    கடந்த 2014-ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, நாட்டின் அணுசக்தி மின் உற்பத்தி திறன் 4,780 மெகாவாட்டாக இருந்தது. இதனை, 10 ஆண்டுகளுக்குள் சுமார் 15,000 மெகாவாட்டாக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயித்தோம்.
    அதனை எட்டுவதற்காக, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து அணுமின் உற்பத்தி திட்டப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
    மேலும், புதிய அணுமின் நிலையங்களை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, 10 ஆண்டுகளுக்குள் எங்களது இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai