சுடச்சுட

    

    'அடுத்த 6 மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் காகிதப் பயன்பாடு இருக்காது'

    By DIN  |   Published on : 24th March 2017 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடுத்த 6 முதல் 7 மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் காகிதப் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.
    உச்ச நீதிமன்றத்தை முழுமையாகக் கணினிமயமாக்குவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு உச்ச நீதிமன்றத் த லைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அடுத்த 6, 7 மாதங்களுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் காகிதப் பயன்பாடு இருக்காது. விசாரணை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்களில் இருந்து ஆவணங்களை மின்னணு முறையில் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
    நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்களும் மின்னணு முறையில் பராமரிக்கப்படவுள்ளன. வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் காகித வடிவத்தில் இருந்து மின்னணு வடிவத்துக்கு மாற்றப்படும். எனவே, நீதிமன்றத்தில் காகிதத்தைப் பயன்படுத்தி மனு தாக்கல் செய்ய வேண்டியது இருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai