Enable Javscript for better performance
அதிகாரிகளின் இடமாற்றத்துக்கு பரிந்துரைக்க வேண்டாம்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி, அமித் ஷா உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அதிகாரிகளின் இடமாற்றத்துக்கு பரிந்துரைக்க வேண்டாம்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி, அமித் ஷா உத்தரவு

    By DIN  |   Published on : 24th March 2017 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றத்துக்கு பரிந்துரைக்கக் கூடாது என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
    உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 பாஜக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் மோடி, அமித் ஷா ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. காலை விருந்துடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மோடியும், அமித் ஷாவும் எம்.பி.க்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதுடன், சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்தனர். அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் எம்.பி.க்களின் தலையீடு இன்றி சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அதிகாரிகள் தவறு செய்தால் அவர்கள் மீது மாநில அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். அதில் எம்.பி.க்கள் தலையிட வேண்டியது இல்லை.
    அதேபோல அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப் பரிந்துரைப்பது, பணி நியமனத்தில் தலையிடுவது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. மாநில அரசு நிர்வாகத்திலும், காவல் துறை செயல்பாடுகளிலும் தலையிடக் கூடாது. உத்தரப் பிரதேசத்தில் சிறப்பான நிர்வாகம் என்பதைத்தான் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு லட்சியமாகக் கொண்டுள்ளது. அதற்கு எம்.பி.க்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று அந்தக் கூட்டத்தில் இரு தலைவர்களும் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
    உத்தரப் பிரதேச எம்.பி.க்களுக்கான ஆலோசனைக் கூட்டம் என்பது இப்போதுதான் முதல் முறையாக பாஜகவில் நடத்தப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், அந்த மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக உள்ளது. அதற்காக இப்போதிருந்தே அக்கட்சி தயாராகி வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai