சுடச்சுட

  

  'ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பால்டிஸ்தானில் இருந்து பாக். வெளியேற வேண்டும்'

  By DIN  |   Published on : 24th March 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Jitendra

  ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டுமென்று பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.
  நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்த அவரிடம், 'காஷ்மீர் பிரச்னைக்கு அந்த மாநில மக்களின் விருப்பப்படி தீர்வுகாண வேண்டும்' என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து ஜிதேந்தர் சிங் கூறியதாவது:
  காஷ்மீர் குறித்து இந்தியா-பாகிஸ்தான் இடையே எவ்விதப் பிரச்னையும் கிடையாது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் மற்றும் கில்கித்-பால்டிஸ்தான் பகுதி குறித்துதான் பிரச்னை நிலவி வருகிறது.
  இந்த இரு பகுதிகளையும் பாகிஸ்தானிடம் இருந்த எப்படி விடுவிப்பது? அதனை இந்தியக் குடியரசுடன் எப்படி இணைப்பது? என்பது மட்டும்தான் பிரச்னையாக உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தும், கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் இருந்தும் பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்றார் அவர்.
  இதனிடையே, கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியை தங்கள் நாட்டின் 5-ஆவது மாகாணமாக அறிவிக்கும் முயற்சியையும் பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai