சுடச்சுட

    

    இயந்திர இறைச்சிக் கூடங்களுக்கான தடை மத்திய அரசின் கொள்கைக்கு எதிரானது: இறைச்சி ஏற்றுமதியாளர்கள்

    By DIN  |   Published on : 24th March 2017 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களுக்கு தடை விதிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு, மத்திய அரசின் தொழிற்கொள்கைக்கு எதிரானது என்று இறைச்சி ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    இதுகுறித்து அகில இந்திய இறைச்சி மற்றும் கால்நடை ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது:
    இயந்திரமயமாக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களுக்கு மத்திய அரசு "தொழிற்சாலை' அந்தஸ்து வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளது.
    மேலும், இறைச்சி ஏற்றுமதித் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில், இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, 50 சதவீத நிதியுதவியையும் மத்திய உணவுப் பதப்படுத்தல் துறை வழங்கி வருகிறது.
    இந்தச் சூழலில், இயந்திர இறைச்சிக் கூடங்கள் அனைத்தையும் மூட உத்தரப் பிரதேச அரசு எடுத்துள்ள முடிவு, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரானது ஆகும்.
    சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடும் மாநில அரசின் உத்தரவை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், சட்டத்துக்குட்பட்டு இயங்கிவரும் இயந்திர இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தால், அதற்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்.
    நாட்டின் இறைச்சி ஏற்றுமதியில் உத்தரப் பிரதேசம் 50 சதவீத அளவுக்கு பங்கு வகிக்கிறது. இறைச்சி ஏற்றுமதியால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.26,685 கோடி வருவாய் கிடைத்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இறைச்சிக் கூடங்களை மூடுவதால் இந்த வருவாயில் பாதி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai