சுடச்சுட

  

  உத்தரகண்ட் பேரவை தலைவராக பிரேம் சந்திர அகர்வால் தேர்வு

  By DIN  |   Published on : 24th March 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PREMCHAND

  உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் சந்திர அகர்வால் (56) வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  70 உறுப்பினர்கள் அடங்கிய உத்தரகண்ட் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து, புதிய முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் கடந்த 18-ஆம் தேதி பதவியேற்றார்.
  இந்நிலையில், சட்டப் பேரவைத் தலைவர் பதவியிடத்துக்கு பாஜக சார்பில் பிரேம் சந்திர அகர்வால் நிறுத்தப்பட்டார். அதற்கான வேட்பு மனுவை அவர் புதன்கிழமை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் தரப்பில் வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தலைவராக பிரேம் சந்திர அகர்வால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  இந்நிலையில், அவர் வியாழக்கிழமை பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.பிரேம் சந்திர அகர்வால் குறித்து முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் குறிப்பிடுகையில், 'அவர் தமது செயல்களில் மிகவும் உறுதியாக இருப்பவர்' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai