சுடச்சுட

    

    எம்.பி.க்குச் சொந்தமான நிறுவனங்கள் மீது புகார்: விசாரிக்கிறது சிறப்புக் குழு

    By DIN  |   Published on : 24th March 2017 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொல்கத்தா: மாநிலங்களவை எம்.பி. கே.டி.சிங்குக்கு சொந்தமான 3 நிறுவனங்கள் ரூ. 2.53 கோடி அளவுக்கு முறைகேடு புரிந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை கொல்கத்தா காவல்துறை அமைத்துள்ளது.
    இதுதொடர்பாக, கொல்கத்தா காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    கே.டி.சிங்குக்கு சொந்தமான அல்கெமிஸ்ட் குழுமத்தைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் ரூ. 2.53 கோடி அளவுக்கு முதலீட்டாளர்களின் பணத்தை முறைகேடு புரிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்களைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மீது கடந்த 16-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அல்கெமிஸ்ட் குழுமத்தின் 3 நிறுவனங்களுக்கு எதிராக முதலீட்டாளர்கள் சிலர் பௌபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
    இந்தப் புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.
    மேற்கு வங்க அமைச்சர்கள் லஞ்சம் வாங்கியது தொடர்பான விடியோ ஆதாரங்கள், நாரதா தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பானது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக கே.டி.சிங் தமக்கு ரூ. 80 லட்சம் அளித்தார் என்று நாரதா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி மேத்யூ சாமுவேல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai