Enable Javscript for better performance
ஏர் இந்தியா விமானத்தில் செல்ல சிவசேனை எம்.பி. கெயிக்வாட்டுக்கு தடை- Dinamani

சுடச்சுட

    

    ஏர் இந்தியா விமானத்தில் செல்ல சிவசேனை எம்.பி. கெயிக்வாட்டுக்கு தடை

    By DIN  |   Published on : 24th March 2017 12:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ravindragaikwad

    மும்பை: விமானத்தில் பயண வகுப்பை மாற்றியதால் ஆத்திரமடைந்த சிவசேனை எம்.பி. ரவீந்திர கெயிக்வாட், ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரைக் காலணியால் தாக்கினார்.

    மகாராஷ்டிர மாநிலம், உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சிவசேனையைச் சேர்ந்த ரவீந்திர கெயிக்வாட்.

    இவர் புணேவிலிருந்து தில்லிக்குச் செல்ல ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் வகுப்பு இருக்கையை ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தார்.

    இந்நிலையில், புணே விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை காலை ஏர் இந்தியா விமானத்தில் ஏற முயன்றபோது எக்கானமி வகுப்பு இருக்கைகள் மட்டுமே உள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரவீந்திர கெயிக்வாட் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    எனினும், அவர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். தில்லியில் விமானம் தரையிறங்கிய பின், அவர் விமானத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளார்.

    அப்போது, ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளர் சுகுமாருக்கும், ரவீந்திர கெயிக்வாடுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, சுகுமாரை ரவீந்திர கெயிக்வாட் தனது காலணியால் தாக்கினார். மேலும், அவரது சட்டையைக் கிழித்தார்.

    இதனிடையே, ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் ரவீந்திர கெயிக்வாட் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    'விமான ஊழியர் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது' என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.

    இதனிடையே, இந்த விவகாரம் குறித்து சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ரவீந்திர கெயிக்வாடிடம் விசாரணை மேற்கொண்டார்.

    இந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சம்பவம் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்தர்கோரி உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஏர் இந்தியா நிர்வாகம் ரவிந்திர கெயிக்வாட் பெயரை கறுப்பு பட்டியலில் சேர்த்தது. இதனையடுத்து அவர் இனிமேல், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது.

    சிவசேனா எம்.பி.,ரவிந்திர கெயிக்வாட்க்கு பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai