சுடச்சுட

    

    காங்கிரஸை வழிநடத்தும் திறன் ராகுல் காந்தியிடம் இல்லை

    By DIN  |   Published on : 24th March 2017 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    smkrishna

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் கட்சியை வழிநடத்தும் திறன் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார்.
    காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான எஸ்.எம்.கிருஷ்ணா (84), கர்நாடக முதல்வர், மத்திய அமைச்சர், மகாராஷ்டிர ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
    கட்சியில் தமக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறி காங்கிரஸிலிருந்து அவர் அண்மையில் விலகினார். இந்நிலையில், தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் புதன்கிழமை அக்கட்சியில் இணைந்தார்.
    இந்நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணா தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
    காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் திறன் ராகுல் காந்தியிடம் காணப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத் தவிர வேறு யாருக்குமே அந்தக் கட்சியை வளர்க்கும் எண்ணம் இல்லை.
    சோனியா காந்தி, தனது கட்சித் தொண்டர்களின் பெயர்களைக் கூட நினைவில் வைத்திருப்பார். ஆனால், தற்போது அந்த நிலை காணப்படவில்லை என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai