சுடச்சுட

  
  YogiAdityanath

  உத்தரப் பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னெளவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை திடீர் பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தினார்.
  மாநில உள்துறையை தம் வசம் வைத்துள்ள யோகி ஆதித்யநாத், ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை சென்றார். காவல் துறையினரின் செயல்பாடுகள் குறித்து அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர், காவல் நிலையத்தில் உள்ள குற்றவியல் பிரிவு, இணையவழிக் குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகங்களிலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அவரது திடீர் வருகையால், காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள் வியப்படைந்தனர்.
  பின்னர் செய்தியாளர்களிடம் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
  மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்யவே காவல் நிலையத்துக்கு வந்தேன். மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி உறுதிசெய்யப்படும். மக்கள் நலனுக்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு மாநில அரசு தயங்காது என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai