சுடச்சுட

    

    காஷ்மீர் மக்களின் விருப்பப்படி தீர்வு: பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்

    By DIN  |   Published on : 24th March 2017 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி: ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு அந்த மாநில மக்களின் விருப்பத்தின்படி தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறினார்.
    பாகிஸ்தானின் குடியரசு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
    இந்தியாவுடன் நல்லுறவையே பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்து அண்டை நாடுகள் உடனான உறவுகள் சிறப்பாக இருப்பதற்கு பாகிஸ்தான் முயன்று வருகிறது. அந்த உறவானது, சம அளவிலான பந்தம், விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
    ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு அந்த மாநில மக்களின் விருப்பப்படியே தீர்வு காணப்பட வேண்டும். அவர்களின் விருப்பத்தின்படியே தீர்வு காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai