Enable Javscript for better performance
சமூகம், கல்வியில் பின்தங்கியோருக்கான தேசிய ஆணையம்: மத்திய அரசு ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    சமூகம், கல்வியில் பின்தங்கியோருக்கான தேசிய ஆணையம்: மத்திய அரசு ஒப்புதல்

    By DIN  |   Published on : 24th March 2017 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமூகம் மற்றும் கல்விரீதியில் பின்தங்கியோருக்கான தேசிய ஆணையம் (என்எஸ்இபிசி) அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
    சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய சமூகத்தினரின் நலனுக்கான புதிய தேசிய ஆணையமொன்றை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
    அந்த அமைப்புக்கு, அரசியல் சாசன அந்தஸ்து வழங்குவதற்கான மசோதா, விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
    புதிதாக அமைக்கப்படவிருக்கும் சமூகம் - கல்வியில் பின்தங்கியோருக்கான தேசிய ஆணையத்துக்கு ஒரு தலைவரும், ஒரு துணைத் தலைவரும், 3 உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள்.
    புதிய ஆணையத்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டதுடன், 1993-ஆம் ஆண்டு பிறப்படுத்தப்பட்டோர் சட்டத்தை ரத்து செய்ததோடு, தற்போது செயல்பட்டு வரும் அந்தச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட பிறப்படுத்தோர் தேசிய நல ஆணையத்தைக் கலைக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம், பட்டியல் வகுப்பினர் தேசிய ஆணையம் ஆகியவை அந்தந்த பிரிவினரின் குறைகளைக் கேட்பது போன்று, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும் குறைகேட்பு ஆணையமாக்கும் வகையில் அதற்கு அரசியல் சாசன அந்தஸ்தை வழங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai