சுடச்சுட

  

  சிபிஐ அமைப்புக்கு என்று தனிச்சட்டத்தை உருவாக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  சிபிஐ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, தனது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது.
  அதில், சிபிஐ அமைப்புக்கு 1946-ஆம் ஆண்டின் தில்லி சிறப்புக் காவல்துறைச் சட்டத்திலிருந்து அளிக்கப்பட்டு வரும் அதிகாரம் போதுமானதாக இல்லை.
  எனவே, சிபிஐக்கு போதிய அதிகாரங்களை வழங்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்தப் பரிந்துரை குறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், 'சிபிஐ அமைப்புக்கு என்று தனிச்சட்டத்தை உருவாக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai