சுடச்சுட

  

  ஜி.எஸ்.டி. அமலாக்கம் ஏற்றுமதியில் உலக நாடுகளுடன் போட்டியிட உதவும்: நிர்மலா சீதாராமன்

  By DIN  |   Published on : 24th March 2017 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nirmalaseetharaman

  புது தில்லி: நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலாக்கம் காரணமாக ஏற்றுமதியில் உலக நாடுகளுடன் நாம் போட்டியிட முடியும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
  இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:
  பல்வேறு வகையான மறைமுக வரி விதிப்புகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி.யை  ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
  நாடு முழுவதும் ஒரே சந்தை என்ற உணர்வை இந்த புதிய வரி விதிப்பு முறை உருவாக்கும். மேலும், மாநிலம் அல்லது மண்டலங்களுக்கிடையில் வர்த்தகம் மேற்கொள்வதில் எந்தவித தடையும் இருக்காது.
  நாடு முழுவதும் பொருட்களின் மதிப்பு சங்கிலித்தொடர்போல ஒருங்கிணைக்கப்பட்டு அதன் வரத்து எளிமையாக்கப்படுத்துவதோடு நேர்மையானதாகவும் அமையும். அதன் காரணமாக, செலவினம் வெகுவாக குறைந்து ஏற்றுமதியில் நாம் உலக நாடுகளுடன் போட்டியிட முடியும்.
  அமெரிக்காவில் அமைந்துள்ள புதிய அரசானது குடியேற்ற விதிமுறைகளில் காணப்படும் பிரச்னைகளைத் தீர்க்க அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை அந்நாட்டு அரசு எந்த மாற்றுமும் செய்யவில்லை என்றார் அவர்.
  வரும் ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும். இந்த வரி விதிப்பு தற்போது வழக்கத்தில் உள்ள கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai