சுடச்சுட

    

    தமிழகத்தில் காற்றாலை மின்சார விநியோகப் பாதை அமைக்க உதவி: மக்களவையில் அதிமுகவுக்கு மத்திய அமைச்சர் பதில்

    By DIN  |   Published on : 24th March 2017 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venugobal

    தமிழகத்தில் காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கு பாதை அமைக்க உதவி செய்யப்படும் என்று மக்களவையில் மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
    இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால் (திருவள்ளூர் தொகுதி உறுப்பினர்) வியாழக்கிழமை துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் 'குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 1,000 கி.மீ.க்கு அதிகமான கடலோரப் பகுதியை கொண்டுள்ளது. காற்றாலை மின்சாரம் தயாரிக்க மிகப் பெரிய வளமாக கடலோரப் பகுதிகள் விளங்குகின்றன. அனல் மின் உற்பத்தி போல, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியால் காற்று மாசு ஏற்படுவதில்லை. இந்நிலையில், நீண்ட கடலோரப் பகுதியைக் கொண்டுள்ள தமிழகத்தில், மக்கள் வசிக்காத பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இதுபோன்ற காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை கடலோரப் பகுதிகளில் தமிழக அரசு அமைத்தால் அதற்கு மத்திய அரசு உதவுமா?' என கேள்வி எழுப்பினார்.
    இதற்கு அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதில் வருமாறு: காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக கடந்த ஆண்டில் மட்டும் 7,700 மெகாவாட் அளவுக்கு தமிழகம் மின் உற்பத்தி செய்துள்ளது. கடலோரப் பகுதிகள் நீங்கலாக பிற இடங்களில் அமைக்கப்படும் காற்றாலைகள் தொடர்பான கொள்கை முடிவை 2015-இல் மத்திய அரசு எடுத்தது. கடலோரப் பகுதியில் இருந்து நீண்ட தொலைவுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அதிகச் செலவாகும். இருப்பினும் அவற்றை அமைக்க மத்திய அரசு அரசு உதவி வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி பாதைக்கும் மத்திய அரசு உதவும். காற்றாலை மின் உற்பத்தி தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய சில காலம் ஆகலாம் என்றார் பியூஷ் கோயல்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai