சுடச்சுட

    

    பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாத 30% நெசவாளர் குடும்பத்தினர்

    By DIN  |   Published on : 24th March 2017 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டில் 30 சதவீத நெசவாளர்களின் குடும்பத்தினர் பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யவில்லை என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
    மக்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பதில்:
    நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நெசவுத் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடைய படிப்பறிவு தொடர்பாக அறிந்து கொள்வதற்காக மத்திய அரசு அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது.
    30 சதவீத நெசவாளி குடும்பத்தினர் பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் அதில் தெரியவந்தது. மேலும், அவர்களில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே உயர் கல்வி முடித்துள்ளனர் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
    நெசவாளிகள் குடும்பத்தினருக்கு இலவசக் கல்வியளிக்கும் வகையில் இந்திரா காந்திய தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் ஆகியவற்றுடன் கைத்தறி நெசவுத் துறை ஆணையம் கடந்த ஆண்டு இருவேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது என்றார் அவர்.
    எல்இடி விளக்குகளால் மின்சேமிப்பு: இதனிடையே, மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 'எல்இடி விளக்குகளின் பயன்பட்டால் ரூ.20,000 கோடி மின் கட்டணம் குறைந்துள்ளது' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai