சுடச்சுட

    

    பெட்ரோல், டீசலுக்கு சீரான வரி: நாமக்கல் எம்.பி. கோரிக்கை

    By DIN  |   Published on : 24th March 2017 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sundram

    பெட்ரோல், டீசலுக்கு சீரான வரி விதிக்க வேண்டும் என மக்களவை அதிமுக உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் (நாமக்கல்) கோரிக்கை விடுத்தார்.
    இது குறித்து மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு அவர் பேசியதாவது: பெட்ரோல், டீசல் விலைக்கு மத்திய, மாநில அரசுகள் தனித் தனியாக பல வரிகளை விதித்து வருகின்றன. மேலும், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளவும், மாற்றி அமைக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு முழு உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகை வரிகளை விதிப்பதையும், விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்ததையும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். இத்தகைய வரி விதிக்கும் போக்கு பொதுமக்கள் மீது பலவித சுமையைத் திணிப்பதற்கு ஒப்பாகும்.
    அண்மையில், பெட்ரோல், டீசலுக்கு மதிப்புக் கூட்டு வரியை (வாட்) தமிழக அரசு அதிகரித்தது. பெட்ரோலுக்கான வாட் வரி 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும், டீசலுக்கான வாட் வரி 21.4 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. இதுபோன்ற வரி உயர்வு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டத்துக்கு எதிரானது. எனவே, பெட்ரோல், டீசலுக்கு சீரான வரியை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றார் சுந்தரம்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai