Enable Javscript for better performance
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்? மத்திய அரசு பரிசீலனை- Dinamani

சுடச்சுட

    

    மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்? மத்திய அரசு பரிசீலனை

    By DIN  |   Published on : 24th March 2017 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி. சௌதரி பேசியதாவது: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தலை நடத்த மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. எனினும், இது மிக முக்கியமான விவகாரம் என்பதால் இதுதொடர்பாக மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிய வேண்டியது அவசியம்.
    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழுவானது அண்மையில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள், பரிந்துரைகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
    இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசு முடிவு செய்யும் என்றார் பி.பி. சௌதரி.
    முன்னதாக, இந்த விவகாரம் குறித்து சட்ட ஆணையத் தலைவர் பி.எஸ். சௌஹான் கூறுகையில், 'மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai