சுடச்சுட

    
    RAJNATH2

    மக்களிடையே பாஜக சாதி, மத பாரபட்சம் காட்டுவதில்லை என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
    உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, பெண்கள் கேலி செய்யப்படுவதைத் தடுப்பதற்காக காவல்துறையில் சிறப்புப் படையை அமைத்துள்ளது. இந்தப் படையைச் சேர்ந்தவர்கள், அந்த மாநிலத்தின் குறிப்பிட்ட சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் வியாழக்கிழமை குற்றம் சாட்டினார். பூங்காக்களில் ஆண்களும், பெண்களும் இப்படித்தான் அமர வேண்டும் என்பதைக் கூட அரசுதான் நிர்ணயிக்குமா? என்று கேள்வியெழுப்பினார்.
    அதற்குப் பதிலளிக்கும் வகையில் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
    மக்களிடையே சாதி, இன, மத அடிப்படையில் பாஜக பாரபட்சம் காட்டுவதில்லை. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைந்து சில நாள்கள்தான் கடந்துள்ளன. அதற்குள் அந்த அரசைக் குறைகூறுவது தவறு என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai