சுடச்சுட

  

  மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு? தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

  By PTI  |   Published on : 24th March 2017 04:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  EVM

   

  புதுதில்லி: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்ய முடியுமா என்பதை தகுந்த மென்பொருள் ஆய்வாளர்கள் கொண்டு விளக்கமளிக்க வேண்டுமென்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  தில்லியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா. இவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்து முடிவுகள் திருத்தப்பட்டிருப்பதாக பரவலாக புகார்கள் எழுந்தன. எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இத்தகைய செயல்கள் மூலம் முடிவுகளை மாற்றியமைக்க முடியுமா என்பதை நம்பிக்கைக்குரிய மின்னணு சோதனைக் கூடம் அல்லது மென்பொருள் ஆய்வாளர் மூலம் ஆய்வு செய்து முடிவுகளை நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தொடர் நடவடிகைகள் எடுக்கப்பட வேண்டும்.

  வாக்குப்பதிவு எந்திரத்தின் தொழில்நுட்ப, எந்திர மற்றும் மென்பொருள் வடிவமைப்பு குறித்த தகவல்கள் ரகசியமாக இருக்கும் வரைதான் எந்திரத்தை ஒன்றும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள தகவலும் பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

  மேலும் ஏதேனும் அரசியல் கட்சியின் சார்பாக வாக்குப்பதிவு எந்திரத்தை சீர்குலைக்கும் இத்தகைய  நடவடிக்கைள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த பொது நல மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உரிய விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு எந்த உத்தர வும் பிறப்பிக்கப்படவில்லை.    

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai