சுடச்சுட

    

    ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் ஆதரவு தர வேண்டும்

    By DIN  |   Published on : 24th March 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    subramaniyasamy

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆதரவு தர வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றுப் பேசியதாவது:
    அயோத்தியில் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது. அதை அலாகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2003-ஆம் ஆண்டு தெளிவுபடுத்தி விட்டது.
    ராமர் கோயில் இடிக்கப்பட்ட பிறகு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று ஹிந்து சமூகத்தினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த இடத்தில் ராமர் கோயிலை மட்டுமே கட்டியெழுப்ப முடியும். இந்த விவகாரத்தில் சுமூகத் தீர்வு எட்டப்படுவதற்கு முஸ்லிம் சமூகத்தினர் ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லாவிட்டால், மாநிலங்களவையில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும்போது, ராமர் கோயில் கட்டுவதற்காக சட்டம் இயற்றப்படும். ராமர் கோயில் பிரச்னைக்கு முடிவு எட்டுவது தொடர்பாக, அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த முயன்றேன். ஆனால், இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு முஸ்லிம் தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்ற நடுவர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
    உத்தரப் பிரதேச மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் துணிச்சல் மிக்கவர். அவரது தலைமையின்கீழ், உத்தரப் பிரேதசம் மிளிரும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
    சுவாமி மத்தியஸ்தராக எதிர்ப்பு
    ராமர் கோயில் பிரச்னையில் சுப்பிரமணியன் சுவாமி மத்தியஸ்தராக செயல்படுவதற்கு வழக்கில் தொடர்புடையவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    ராமர் கோயில் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பதற்காக, வழக்கில் தொடர்புடையவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு சுப்பிரமணியன் சுவாமியிடம் உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.
    இந்நிலையில் சர்ச்சைக்குரிய கோயில் இடத்துக்கு உரிமை கோரும் நிர்மோஹி அகாரா என்ற அமைப்பின் தலைமை குரு மகந்த் ராம்தாஸ், ''ராமர் கோயில் பிரச்னைக்கு எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாமல், அரசமைப்புச் சட்டப்படியே தீர்வு காணப்பட வேண்டும்; எனவே, பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காக, ஓய்வுபெற்ற அல்லது பணியில் உள்ள நீதிபதிகள் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமிக்க வேண்டும்'' என்றார்.
    இதே கருத்தை, அகில பாரத ஹிந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி, முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த காலிக் அகமது கான் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai