சுடச்சுட

    

    ராமர் பாலம் இயற்கையானதுதானா? இதோ நடக்கப் போகுது ஒரு புது ஆராய்ச்சி!

    By DIN  |   Published on : 24th March 2017 07:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rama_sethu

     

    புதுதில்லி: ராமேஸ்வரத்துக்கும் மன்னார் வளைகுடாவுக்குமிடையில் அமைந்துள்ள ராமசேது பாலத்தின் உருவாக்கம் குறித்தது ஆய்வு ஒன்றினை செய்ய இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

    இந்துக்களின் நம்பிக்கைக்கு உரியதான, ராமேஸ்வரத்துக்கும் மன்னார் வளைகுடாவுக்குமிடையில் அமைந்துள்ள ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்த ஆய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வானது இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலினால் நடத்தப்பட உள்ளது.

    இந்திய தொல்பொருள் துறையின் முன்னாள் இயக்குநரான அலோக் திரிபாதி தலைமையில் வரும் அக்டோபர் மாதம் இந்த ஆய்வு தொடங்க உள்ளது என்றும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai