சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு விவகாரம்: உர்ஜித் படேலுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப முடிவு

    By DIN  |   Published on : 24th March 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Urjitcol

    ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விளக்கம் கேட்பதற்காக, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேலுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்புவதற்கு நாடாளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு, வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இதுதொடர்பாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
    ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, உர்ஜித் படேல் மட்டுமின்றி, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ், நிதிச் சேவைகள் செயலர் அன்ஜுலி சிப் துக்கல் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட உள்ளது. உர்ஜித் படேலும், நிதியமைச்சக அதிகாரிகளும் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக இயலவில்லை எனில், வேறு நாளில் அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும்.
    உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் மொத்த மதிப்பு எவ்வளவு? என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
    மேலும், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் அடிக்கடி விதிமுறைகளை மாற்றியது ஏன்? என்று உர்ஜித் படேல் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு கேட்கும் எனத் தெரிகிறது.
    புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். அதையடுத்து, புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகள், அதாவது ரூ.15.44 லட்சம் கோடி தொகை செல்லாத ரூபாய் நோட்டுகளாகின.
    இதற்கு முன்பு, ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து உர்ஜித் படேலிடம் கடந்த ஜனவரி மாதம் விளக்கம் கேட்டபோது, நவம்பர் 8-ஆம் தேதிக்குப் பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 எவ்வளவு என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai