சுடச்சுட

  
  Sushma

  அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாக்களில் கட்டுப்பாடு விதிக்கும் விவகாரம் குறித்து இந்தியர்கள் கவலைப்பட தேவையில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
  இதுகுறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியதாவது:
  அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு பல்வேறு சலுகைகளுடன் கூடிய ஹெச்1பி விசா வழங்கப்படுவது வழக்கம். தற்போது அந்த விசாக்கள் வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
  இந்த விவகாரம் தொடர்பாக 4 மசோதாக்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும், அந்த மசோதாக்கள் நிறைவேறவில்லை.
  இந்த மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தமது கவலைகளை அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து தற்போதைக்கு இந்தியர்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
  ஹெச்1பி விசாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் விவகாரம் என்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் மட்டும் புதிதாக நடைபெறவில்லை. இது அவ்வப்போது நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது என்றார் சுஷ்மா.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai