சுடச்சுட

    

    ஹைதராபாத் குண்டு வெடிப்பு: சுவாமி அசீமானந்துக்கு ஜாமீன்

    By DIN  |   Published on : 24th March 2017 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்துக்கு ஹைதராபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
    இதே வழக்கில் ஹைதராபாத் பெருநகர நீதிமன்றம் ஏற்கெனவே 3 பேருக்கு அண்மையில் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், அசீமானந்த் மற்றும் இதே வழக்கின் மற்றொரு குற்றவாளி பரத் பாய் ஆகியோர் மீதான ஜாமீன் மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது, 'தலா ரூ.50,000 காப்புறுதித் தொகையைச் செலுத்தி இருவரும் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். இருவரும் ஹைதராபாத் நகரை விட்டு வெளியேறக் கூடாது. நீதிமன்றம் கூறும்போது நேரில் ஆஜராக வேண்டும்' என்ற நிபந்தனைகளுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
    கடந்த, 2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் மெக்கா மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக தேடப்பட்டு வந்த சுவாமி அசீமானந்த், கடந்த 2010-ஆம் ஆண்டு ஹரித்வாரில் கைது செய்யப்பட்டார்.
    முன்னதாக, 2007-ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பிலும் அசீமானந்த் மீது குற்றம்சாட்டப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அசீமானந்த் உள்பட 7 பேர் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர் ஜெய்ப்பூர் சிறையில் இருந்து ஹைதராபாத் சிறைக்கு மாற்றப்பட்டார். இப்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai