சுடச்சுட

    

    ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும்: மத்திய அரசு தகவல்

    By DIN  |   Published on : 25th March 2017 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
    மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடனடிக் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் மோதிலால் வோரா 'மதிய உணவுத் திட்டம்' தொடர்பாக பேசியதாவது:
    நாட்டில் சுமார் 12 கோடி மாணவர்கள் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், மதிய உணவு பெற ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
    இதன்மூலம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவை நிறுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகத் தெரிகிறது என்றார் மோதிலால் வோரா.
    எனினும், இந்தக் குற்றச்சாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மறுத்தார். அப்போது, அவர் கூறியதாவது: ஆதார் அட்டை இல்லாததால், மாணவர்களுக்கு மதிய உணவு மறுக்கப்பட மாட்டாது. பள்ளிகளில் மதிய உணவு உண்டு வரும் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கம்போல் உணவு வழங்கப்படும்.
    ஏற்கெனவே, பல மாணவர்கள் ஆதார் அட்டைகளைப் பெற்றுள்ளனர். ஆதார் அட்டை இல்லாத மாணவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு புதிதாக அட்டைகள் பெற்றுத் தரப்படும்.
    ஆதார் அட்டை உருவாக்கப்பட முடியாத சூழலில், அந்த மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பிரத்யேக அடையாள எண்களை வழங்கும்.
    மதிய உணவுத் திட்டத்தில் ஆதார் அட்டை இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின், பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai