சுடச்சுட

  

  மாநிலத்தில் 1,342 கிராம ஊராட்சிகளில் இன்னும் இரு ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.
  ஒடிஸாவில் 6,234 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 சதவீத எண்ணிக்கையில், அதாவது 1,342 ஊராட்சிகளை வறுமை முற்றிலும் இல்லாத மாதிரி கிராம ஊராட்சிகளாக 2019 அக்.2ஆம் தேதிக்குள் மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  புவனேசுவரத்தில் தலைமைச் செயலர் ஏ.பி.பதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்த மாநில அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்ட யோசனைகளை உள்ளாட்சித் துறை முன்வைத்தது.
  மத்திய அரசின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுதும் சுமார் 50 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் 2019 அக்.2ஆம் தேதிக்குள் வறுமையை ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தில் மேற்கண்ட 1,342 கிராம ஊராட்சிகளில் வறுமையை அறவே ஒழிக்க உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன.
  இது தொடர்பாக உயர்நிலை ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பதி கூறியது:
  இந்த வறுமைத் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் நீடித்த வருமானம், பசுமையான சூழல், தரமான கல்வி, சுத்தம், சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.
  வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பண்ணை மற்றும் பண்ணை சாராத நடவடிக்கைகளில் வாய்ப்புகளை உருவாக்குதல், ஊராட்சி அளவில் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் என நான்கு முனை கொண்ட அணுகுமுறையை கையாள மாநில அரசு விரும்புகிறது.
  மேற்கண்ட உத்திகளுடன் தனிநபர், தனி வீடு, சமூகம், கிராம ஊராட்சி என நான்கு நிலைகளில் மிகுந்த கண்காணிப்புடன் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார் ஏ.பி. பதி.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai