Enable Javscript for better performance
கடந்த மூன்றாண்டுகளில் ரூ.45,622 கோடி கருப்புப் பணம் பறிமுதல்: மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    கடந்த மூன்றாண்டுகளில் ரூ.45,622 கோடி கருப்புப் பணம் பறிமுதல்: மத்திய அரசு

    By DIN  |   Published on : 25th March 2017 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி: நாடு முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனைகளில் ரூ.45,622 கோடி அளவிலான கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து மக்களவையில் நேற்று வெள்ளிக்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
    கடந்த 2013-14, 2014-15, 2015-16 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளில் சுமார் ரூ.45,622 கோடி கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
    இதுதவிர, ரூ.3,625 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகள், நகைகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai