சுடச்சுட

  

  குஜராத் சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநில பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
  இதுதொடர்பாக, அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று எம்.பி.க்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
  மேலும், மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
  மின்னணு முறையில் ரொக்கப் பரிமாற்ற நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திய அவர், பொதுமக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
  இந்தச் சந்திப்பின்போது ராஜஸ்தான், கோவா மாநிலங்களின் எம்.பி.க்களும், அந்தமான் நிகோபார், டாமன் - டையூ யூனியன் பிரதேசங்களின் எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.
  மேலும் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசியத் தலைவர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  குஜராத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai