சுடச்சுட

    

    குற்றவாளிகளுக்கு தேர்தலில் நிற்க தடை கோரும் மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 25th March 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல்களில் போட்டியிட குற்றவாளிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    தில்லி பாஜக செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான அஸ்வின் உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் நபர்கள், தேர்தல்களில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். மேலும், அந்த நபர்கள் நீதித்துறையிலோ, அரசு நிர்வாகங்களிலோ பணியாற்ற தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
    இந்த மனுவை கடந்த சில நாள்களுக்கு முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதன்பேரில், தனது பதில் மனுவை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பித்தது.
    அதில், மனுதாரர் கோரியுள்ள கருத்துகளுக்கு தாம் ஆதரவளிப்பதாகவும், எனினும், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரமானது சட்டமியற்றும் அதிகாரம் படைத்த மத்திய அரசின் வரம்புக்குள்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
    இந்நிலையில், இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
    அப்போது, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு மீதான மறு விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai