சுடச்சுட

  

  கோவா பட்ஜெட் தாக்கல்: விவசாயம், கல்விக்கு முக்கியத்துவம்

  By DIN  |   Published on : 25th March 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  butjet

  கோவா மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக, சட்டப் பேரவைக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வர் மனோகர் பாரிக்கர்.

  2017-18ஆம் நிதியாண்டுக்கான கோவா மாநில பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், கல்வி ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  கோவாவில் பாஜக தலைமையிலான புதிய அரசால் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். சுமார் ரூ.16,000 கோடிக்கான மாநில அரசின் பட்ஜெட்டை, சட்டப் பேரவையில் முதல்வர் மனோகர் பாரிக்கர் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து பேசியதாவது:
  மாநில பொருளாதார வளர்ச்சியை, அடுத்த நிதியாண்டுக்குள் 11 சதவீதமாக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு ரூ.172 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். வர்த்தகரீதியிலான மாம்பழச் சாகுபடியை அதிகரிப்பதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  தாய்மொழிவழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், கொங்கணி மற்றும் மராத்தி மொழிவழிக் கல்வி பள்ளிக்கூடங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள், பழங்குடியினர் நலன் தொடர்பான சமூக நலத் திட்டங்களுக்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவாவில் நிகழாண்டில் ஃபிபா யூ-17 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியும், அடுத்த ஆண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ரூ.105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் பாரிக்கர்.
  பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது:
  கோவாவில் எரிபொருள்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி (வாட்) 15 சதவீதம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. கோவாவில் கடந்த 5 ஆண்டுகளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.60-ஐத் தாண்டாமல் இருக்கும் வகையில் வாட் வரியைக் குறைத்து வந்த பாஜக அரசு, தற்போது அதனை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளது.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai