சுடச்சுட

  

  கோவா பேரவை துணைத் தலைவராக பாஜக எம்எல்ஏ மைக்கேல் தேர்வு

  By DIN  |   Published on : 25th March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mickel

  கோவா சட்டப் பேரவை துணைத் தலைவராக பாஜக உறுப்பினர் மைக்கேல் லோபோ வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
  40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் 17 இடங்களிலும் பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தபோதிலும், பிற கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக பாரிக்கர் பதவியேற்றார்.
  இதனிடையே, கோவா சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதில், பேரவைத் தலைவராக பாஜக உறுப்பினர் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.
  இந்நிலையில், பேரவை துணைத் தலைவரை தேர்வு செய்தவதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக உறுப்பினர் மைக்கேல் லோபோ, 21 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் உறுப்பினர் இசிடோர் ஃபெர்னாண்டஸுக்கு 15 வாக்குகளே கிடைத்தன.
  இந்த வாக்கெடுப்பின்போது, காங்கிரஸ் உறுப்பினர் பிரான்சிஸ் சில்வீரா, தேசியவாத காங்கிரஸ் உறுபிப்பினர் சர்ச்சில் ஆலேமாவ் ஆகியோர் அவைக்கு வரவில்லை.
  பேரவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மைக்கேல் லோபோவை, முதல்வர் மனோகர் பாரிக்கர் அழைத்துச் சென்று அவரது இருக்கையில் அமரவைத்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai