Enable Javscript for better performance
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: 119 வழக்குகள் குறித்த ஆவணங்களை கேட்கிறது உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: 119 வழக்குகள் குறித்த ஆவணங்களை கேட்கிறது உச்ச நீதிமன்றம்

    By DIN  |   Published on : 25th March 2017 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 1984-ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான 199 வழக்குகளை முடித்துக் கொள்வது என்று சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ள நிலையில் அந்த வழக்குகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
    கடந்த 1984-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, தில்லி உள்பட நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதில் தில்லியில் மட்டும் சுமார் 2,700 பேர் உயிரிழந்தனர்.
    இந்தக் கலவரங்கள் தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்காக, மத்திய பாஜக அரசு கடந்த 2015-ஆம் ஆண்டில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இக்குழுவின் விசாரணையை துரிதப்படுத்தக் கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த மனு மீது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
    அப்போது, மொத்தமுள்ள 293 வழக்குகளில் 199 வழக்குகளை முடித்துக் கொள்வது என்று சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
    இதையடுத்து, மத்திய அரசுக்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், '199 வழக்குகளையும் ஆராய்வதற்கு உத்தேசித்துள்ளோம். அந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அடுத்த மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என்று தெரிவித்தனர். மேலும், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai