Enable Javscript for better performance
சுவாமி அசீமானந்தின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: தெலங்கான அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    சுவாமி அசீமானந்தின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: தெலங்கான அரசு தகவல்

    By DIN  |   Published on : 25th March 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ASEEMANAND

    ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுவாமி அசீமானந்தின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
    ஹைதராபாதிலுள்ள மெக்கா மசூதியில் கடந்த 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பிரதான குற்றவாளியான சுவாமி அசீமானந்த் கடந்த 2010-ஆம் ஆண்டு ஹரித்துவாரில் கைது செய்யப்பட்டார்.
    இதேபோல், 2007-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரிலுள்ள அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும் அசீமானந்த் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து அசீமானந்த் உள்ளிட்ட 7 பேரை ஜெய்ப்பூர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி விடுவித்தது. இதையடுத்து, ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஹைதராபாத் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் அசீமானந்துக்கு ஹைதராபாத் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ அக்பரூதீன் ஒவைஸி தெலங்கானா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில், சிபிஐ-யின் விசாரணைக்குப் பின் அசீமானந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அசீமானந்த் ஒரு பயங்கரவாதி ஆவார். அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக மாநில அரசு, தேசிய புலனாய்வு அமைப்புக்கு அழுத்தம் தர வேண்டும் என்றார் அவர்.
    இதற்கு பதிலளித்து, உள்துறை அமைச்சர் நயனி நரசிம்மரெட்டி பேசுகையில், 'சுவாமி அசீமானந்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மேலும், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai