சுடச்சுட

  

  காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு, வெள்ளிக்கிழமை தாயகம் திரும்பினர்.
  உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி சோனியா காந்தி திறந்த வாகனத்தில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவர் தில்லி திரும்பினார். பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். மருத்துவமனைக்கு சென்று அடிக்கடி சிகிச்சை எடுத்தார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடந்து முடிந்த தேர்தலுக்கான பிரசாரத்திலும் அவர் ஈடுபடவில்லை.
  இந்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அவரது மகனும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி, சோனியா காந்தியைப் பார்க்க வெளிநாட்டுக்கு கடந்த 16-ஆம் தேதி சென்றார். ஆனால், இருவரும் எந்த நாட்டுக்குச் சென்றனர் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், அமெரிக்காவுக்கு இருவரும் சென்றதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.
  இந்நிலையில், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தில்லிக்கு வெள்ளிக்கிழமை திரும்பினர். 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்ததையடுத்து, அக்கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai