சுடச்சுட

  
  pates

  காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
  இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
  காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஜூலை 11-ஆம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  கர்நாடகத்தில் குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவும் சூழலில், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது சாத்தியமில்லை. பெங்களூரு, மைசூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு தற்போது 3-4 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.
  குடிநீருக்கே வழியில்லாதபோது தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் தருவது? தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறோம்.
  எனினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கர்நாடக அரசின் சட்ட வல்லுநர்கள் குழு ஆராய்ந்து வருகிறது. தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai