சுடச்சுட

  

  தில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் தீ விபத்து: ஒருவர் பலி

  Published on : 25th March 2017 02:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  fire

  புதுதில்லி: தில்லியில் நரேலா தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  நரேலா தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மலமலவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியது.

  தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 32 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

  இதனிடையே, தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai