Enable Javscript for better performance
பசு வதையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை: தனிநபர் மசோதா கொண்டு வந்தார் சுப்பிரமணியன் சுவாமி- Dinamani

சுடச்சுட

    

    பசு வதையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை: தனிநபர் மசோதா கொண்டு வந்தார் சுப்பிரமணியன் சுவாமி

    By DIN  |   Published on : 25th March 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    subramaniaswami

    பசுவை வதைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மசோதா ஒன்றை மாநிலங்களவையில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தார்.
    அந்த மசோதாவில், பசுக்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு 'நிர்வாக அமைப்பு' ஒன்றை நிறுவ வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பசுவதையை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்; பசுவதையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் ஆகிய நடவடிக்கைகளை அரசமைப்புச் சட்டத்தின் 37-ஆவது மற்றும் 48-ஆவது பிரிவுகளில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    அரசமைப்புச் சட்டத்தின் 37-ஆவது பிரிவு, சமூக நலனுக்காக சட்டமியற்ற வேண்டியது அரசின் கடமை என்றும், 48-ஆவது பிரிவு, பசுவதைக்கு அரசு தடை விதிக்க வேண்டியது கட்டாயம் என்றும் தெரிவிக்கிறது.
    மேலும், அந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:
    மகாத்மா காந்தி விரும்பியதைப் போல, பசுவதை உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டுமெனில், அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
    பசுக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு 'நிர்வாக அமைப்பு' ஒன்று நிறுவப்பட வேண்டும். அந்த அமைப்பில் கால்நடைத் துறைச் செயலர் மற்றும் விவசாயப் பொருளாதாரம், விலங்குகள் நலத் துறை, இந்திய வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த 5 நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
    அந்த நிர்வாக அமைப்பு, பசுக்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை ஆய்வு நடத்தி ஓராண்டுக்குள் சேகரிக்க வேண்டும். பின்னர், பசுக்களை சுகாதாரத்துடன் பராமரிப்பதற்கான கொள்கைகள் வகுப்பது, கோசாலைகளுக்கு நிதியுதவி அளிப்பது ஆகிய பணிகளை அந்த அமைப்பு மேற்கொள்ளும். மேலும் பசுவதையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அந்தக் குழு பரிந்துரை செய்யும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai