Enable Javscript for better performance
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்

    By DIN  |   Published on : 25th March 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கு இந்திய அரசும், அமெரிக்க அரசும் ஒப்புக்கொண்டுள்ளன.
    இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் ஆண்டன், செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அமெரிக்கா வந்துள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹெச்.ஆர்.மெக் மாஸ்டரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
    அப்போது, இரு நாடுகளும் சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக, இந்தியாவும், அமெரிக்காவும் முழு வீச்சில் செயல்படுவது என்று இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழாண்டு இறுதியில் அமெரிக்கா வருவதை அதிபர் டிரம்ப் எதிர்நோக்கியிருக்கிறார் என்றார் மைக்கேல் ஆண்டன்.
    பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தனது மிகப்பெரிய கூட்டாளி என்று அமெரிக்க அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. பின்னர், ராணுவத் தளவாடங்களை இரு நாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai