சுடச்சுட

  
  FarooqAbdullah1

  தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தனது மனைவியின் சொத்து விவரங்கள் எதுவும் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், அனந்த்நாக் மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 9 மற்றும் 12-ஆம் தேதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் சகோதரர் முஃப்தி தஸாதக் ஹுசைன் உள்பட 5 கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  இவர்களில், ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிடும் ஃபரூக் அப்துல்லா, தனது சொத்துகளின் மதிப்பு ரூ.14 கோடி என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தனது மனைவி, 1990-ஆம் ஆண்டில் இருந்து லண்டனில் வசித்து வருவதால், அவரது சொத்து மதிப்பு தனக்குத் தெரியாது என்று ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
  மேலும், ஜம்மு-காஷ்மீரில் தனது மனைவிக்கு சொத்து எதுவும் கிடையாது என்றும் அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
  தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) சார்பில் முஃப்தி தஸாதக் ஹுசைன் போட்டியிடுகிறார். அவர், தனது அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.24 கோடி என்று தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி ராதிகா கபூரின் சொத்து மதிப்பு ரூ.11 கோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai