Enable Javscript for better performance
மோசடி நிதி நிறுவனங்கள் மீதான விசாரணை தொடக்கம்: மத்திய அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    மோசடி நிதி நிறுவனங்கள் மீதான விசாரணை தொடக்கம்: மத்திய அரசு தகவல்

    By DIN  |   Published on : 25th March 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மோசடி நிதி நிறுவனங்களுக்கு எதிரான 36 வழக்குகள் மீதான விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது என்று மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
    மோசடி நிதி நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய நிதித்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் எழுத்துப்பூரவமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
    கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் மோசடி நிதி நிறுவனங்களுக்கு எதிரான 36 வழக்குகள் மீதான விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.
    மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீட்டு நிறுவனங்கள், மோசடி நிதி நிறுவனங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) 104 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai