சுடச்சுட

  

  உத்தரப் பிரதேச மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத்தை சமாஜவாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் இளைய மருமகளான அபர்ணா திடீரென வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
  லக்னௌவில் உள்ள மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கான விருந்தினர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் அபர்ணா கலந்து கொண்டார். அதையடுத்து யோகி ஆதித்யநாத்தை அபர்ணா சந்தித்துள்ளது உத்தரப் பிரதேச அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மரியாதை நிமித்தமாகவே ஆதித்யநாத்தை சந்தித்ததாக அபர்ணா குறிப்பிட்டுள்ளார்.
  அதேபோல், யோகி ஆதித்யநாத்தை பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் ராம்வீர் உபாத்யாய சந்தித்துப் பேசினார்.
  இதுகுறித்து அவர் தெரிவித்தபோது, தனக்கும், தனது மகனுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai