சுடச்சுட

    

    விவசாயிகளை தனியாக விட்டுவிட முடியாது: தில்லியில் பிரகாஷ் ராஜ் பேச்சு

    By DIN  |   Published on : 25th March 2017 12:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    prakasraj

    புது தில்லி: விவசாயிகளை தனியாக விட்டுவிட முடியாது என்று மத்திய அமைச்சர்  அருண்ஜேட்லியுடனான சந்திப்புக்குப் பிறகு தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.

    விவசாயிகளின் பிரச்னை குறித்து நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியையும்,  இன்று அருண்ஜேட்லியையும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஷால் உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசினர்.

    பிறகு தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், இது தமிழக விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல, இதனை இந்திய விவசாயிகளின் பிரச்னையாக பார்க்க வேண்டும்.

    மத்திய அமைச்சர்களை விவசாய பிரச்னைக்காக சந்தித்தோம். தமிழக விவசாயிகள் கடந்த 11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் பிரச்னையைக் கேட்க யாருமில்லை.

    இது இந்திய விவசாயிகளின் பிரச்னை. காலங்காலமாக அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். இங்கே வந்தது இவர்கள் தனியாக இல்லை. இவர்களுடன் நாங்களும் இருக்கிறோம் என்பதைச் சொல்லவே.

    போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த போராட்டம் எவ்வளவு பெரிதாக நடக்கும் என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    மத்திய அமைச்சர்கள் இந்த பிரச்னையை எடுத்துச் சொன்னதும், நாங்கள் பார்த்துக் கொளகிறோம், பிரச்னை என்னவென்று தெரியும் என்கிறார்கள் அது மட்டும் போதாது என்று பிரகாஷ் ராஜ் கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai