சுடச்சுட

    

    கேரளத்தில் 14 வயதிலேயே மாணவர் ஒருவர், பெண் குழந்தைக்கு தந்தையான விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.
    இச்சம்பவம் தொடர்பாக அந்த மாணவர் மீதும், 18 வயது இளம்பெண் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த அந்த மாணவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியில் அவரது உறவினர் ஒருவரின் வீடும் உள்ளது. இந்நிலையில், இந்த மாணவர் தனது உறவினரின் 18 வயது மகளுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதன் காரணமாக, அந்தப் பெண் கர்ப்பமடைந்தாகக் கூறப்படுகிறது.
    இந்த விஷயம் நாளடைவில் அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. எனினும், இந்த விஷயத்தை அவர்கள் வெளியே கூறவில்லை.
    இந்தச் சூழலில், அந்தப் பெண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் கலமாசேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
    இதன்பேரில், அப்பெண்ணின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், தங்கள் மகளை அந்த மாணவன் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த மாணவனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்தப் பெண்தான் தன்னுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டதாக மாணவர் கூறியுள்ளார்.
    இதனைத் தொடர்ந்து, அந்த மாணவன் மற்றும் பெண் மீது போலீஸார் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். எனினும், அந்த மாணவன் 18 வயதுக்கு கீழ் உள்ளதால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, அந்த மாணவன் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai