சுடச்சுட

    

    3 முறை முதல்வராக இருந்தும் மனைவியின் சொத்து விவரம் தெரியவில்லையே!

    By DIN  |   Published on : 25th March 2017 02:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    farooq-abdullah


    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்தவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு, தனது மனைவியின் சொத்து விவரம் தெரியவில்லை.

    2014ம் ஆண்டு தனக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்தவரும், பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருபவருமான மொல்லி அப்துல்லாவின் சொத்து விவரம் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் ஃபரூக் அப்துல்லா.

    ஸ்ரீநகர்-பத்காம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 81 வயதான ஃபரூக் அப்துல்லா, வேட்பு மனுவோடு அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவியின் சொத்து விவரம் பற்றிய கேள்விக்குத்தான் இவ்வாறு கூறியுள்ளார்.

    பிரமாணப் பத்திரத்தில் ஃபரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது, "1990ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அவர் லண்டனில் வசித்து வருகிறார். லண்டனில் அவர் வாங்கியுள்ள சொத்துகள் குறித்து எனக்கு தெரியாது. ஆனால்,  ஜம்மு காஷ்மீரில் அவரது பெயரில் எந்த சொத்தும் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

    50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் மொல்லி அப்துல்லாவை திருமணம் செய்து கொண்ட ஃபரூக் அப்துல்லாவுக்கு ரூ.1.68 கோடியில் அசையும் சொத்துகளும், ரூ.12.50 கோடியில் அசையாச் சொத்துக்களும் உள்ளன.

    மூன்று முறை முதல்வராக இருந்தவருக்கு மனைவியின் சொத்து விவரம் தெரியவில்லை என்றாலும், ஃபரூக் அப்துல்லா தற்போது உயிரோடு இருப்பதற்கு அவர் மனைவி தானமாக வழங்கிய சிறுநீரகம் தான் காரணம் என்பதால், ஃபரூக் அப்துல்லாவுக்கு மொல்லி அப்துல்லாவே ஒரு சொத்துதான் என்று கூறப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai