சுடச்சுட

    

    அருணாசலப் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட என்எஸ்சிஎன் (கே) தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
    இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
    திபாங் மாவட்டத்திலுள்ள கலாபானி பகுதியில் என்எஸ்சிஎன் (கே) தீவிரவாத இயக்கத்தினர் பதுங்கியிருப்பதாக, போலீஸாருக்கு சில தினங்களுக்கு முன் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
    அப்போது, தாகர் பெமி (30), ஒபாங் லோ (36), போபல் லீகோ (32) ஆகிய 3 தீவிரவாதிகள் சிக்கினர். அவர்களிடம் இருந்து நவீன ரக துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அந்த அதிகாரி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai