சுடச்சுட

    

    உத்தரகண்ட் நிலம் கையக முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு அரசு பரிந்துரை

    By DIN  |   Published on : 26th March 2017 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரகண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தியதில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது குறித்து விசாரணை நடத்த இருப்பதாக, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரிவேந்திர சிங் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக, டேராடூனில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது:
    உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, கடந்த 2011-2016-ஆம் ஆண்டு கால கட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தியதில், ரூ.240 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு 20 மடங்கு அளவுக்கு இழப்பீடு கிடைப்பதற்காக, பண்ணை நிலங்கள், விவசாயப் பணிகள் அல்லாத நிலங்கள் என்று காட்டப்பட்டுள்ளது.
    மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த முறைகேட்டில், 18 சம்பவங்கள் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
    எனவே, இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருக்கிறேன் என்றார் அவர்.
    இந்த முறைகேட்டில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு தொடர்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ""முன்கூட்டியே எதையும் தெரிவிக்க இயலாது; எனினும், முறைகேட்டில் ஈடுபட்டது எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், நடவடிக்கையில் இருந்து அவர்கள் தப்ப முடியாது'' என்று முதல்வர் பதிலளித்தார்.
    மேலும், ""இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக இதுவரை 6 அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் ஓய்வுபெற இருப்பதால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் திரிவேந்திர சிங் ராவத் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai