சுடச்சுட

    

    உ.பி.யில் இறைச்சி விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

    By DIN  |   Published on : 26th March 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்ட விரோத மற்றும் இயந்திர பசுவதைக் கூடங்களை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லக்னெளவில் இறைச்சி விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
    இதுதொடர்பாக, லக்னெள ஆட்டிறைச்சி வியாபார சங்கத் தலைவர் முபீன் குரேஷி, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பசுவதைக் கூடங்களை மூடுவதால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பசுவதைக் கூடங்களை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி விற்பனையாளர்களும் தங்களது கடைகளை சனிக்கிழமை அடைத்துவிட்டு, போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். வரும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
    அரசின் தடை உத்தரவால், மாட்டிறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இங்குள்ள சில உணவங்கள் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி உணவு வகைகளை விற்பனை செய்யத் தொடங்கின. அந்த உணவகங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன.
    மீன் விற்பனையாளர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது என்றார் அவர்.
    இதனிடையே, போராட்டத்தைக் கைவிடுமாறு இறைச்சி விற்பனையாளர்களை பாஜக மாநிலத் தலைவர் மஸார் அப்பாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அரசின் நடவடிக்கையால் சட்ட விரோத பசுவதைக் கூடங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர்; நேர்மையாக இறைச்சிக் கூடங்களை நடத்துபவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, சட்டவிரோத பசுவதைக் கூடங்களை மூடுவதற்கு உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai